கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உள்ள வாய்ப்புகளை பற்றி பெரும்பான்மையான மாணவ மாணவிகளுக்கு விபரம் கிடைப்பதில்லை. இதில் குறிப்பாக கிராமப்புற மாணவ மாணவிகளுக்கு இந்த இடைவேளை அதிகமாகவே உள்ளது. இக்குறையை போக்க எடுக்கப்பட்ட முயற்சியே வெற்றிப்பாதை. 2019ல் எடுத்த முயற்சியில் கிடைத்த வெற்றி எங்களுக்கு புத்துணர்வு தந்துள்ளது. 2020ல் மீண்டும் களம் கண்டு மாணவ மாணவிகளை சந்திக்க ஆவலாக உள்ளோம்.
ஏப்ரல் 6ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆம்பலாப்பட்டு கிராமத்தில் நடந்தேறிய வெற்றிப்பாதை 2019 நிகழ்ச்சியில் 6 தொகுப்பாளர்களும் 23 நிபுணர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 32 கிராமங்களில் இருந்து ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனுற்றனர்.
அந்த நிகழ்ச்சியில் இருந்து ஒரு சிறிய தொகுப்பு.